மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை + "||" + Sangadahara Chaturthi Special Puja

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
கூடலூர்

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், 11 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 5 மணிக்கு ஹோமமும் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோன்று கோத்தகிரி டானிங்டனில் கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, தேங்காய்களை கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் டானிங்டன் விநாயகர் கோவில், கடைவீதி விநாயகர் கோவிலிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.