மாவட்ட செய்திகள்

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி + "||" + Public panic over leopard poaching

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
பந்தலூர்

பந்தலூர் பஸ் நிலையம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் பஸ் நிலையம் அருகில் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் வீடு உள்ளது. இங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பதிவாகி இருந்தது. 

அதில், பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில் நடந்து செல்லும் சிறுத்தைப்புலி பஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. இதுகுறித்து தேவாலா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.