கோபுர பாலாலய பூஜை


கோபுர பாலாலய பூஜை
x
தினத்தந்தி 24 Nov 2021 3:24 PM GMT (Updated: 24 Nov 2021 3:24 PM GMT)

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கோபுர பாலாலய பூஜை நடந்தது.

வடமதுரை: 

வடமதுரையில் பழமை வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கோபுர பாலாலய பூஜை கோவிலில் நடைபெற்றது. 

அப்போது கோ பூஜை, விஷ்வக்சேனர் ஆராதனை, ஸ்ரீசூத்த ஹோமம், நாராயண ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் இந்து சமய அறநிலையத்துறை வேடசந்தூர் ஆய்வாளர் ரஞ்சனி, கோவில் செயல் அலுவலர் மாலதி, கோவில் திருப்பணி நன்கொடையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோபுர பாலாலய பூஜை நடத்தப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான கோவில் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.


Next Story