மாவட்ட செய்திகள்

போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் + "||" + Police Awareness Campaign

போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
வேடசந்தூர் அருகே போலீஸ் சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் துறை சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமை தாங்கி பேசினார். இதில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பற்றியும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் பெண் போலீசார் விளக்கி கூறினர். மேலும் மாணவர்கள் சீருடை அணிந்து, தலைமுடியை சீராக வெட்டி வரவேண்டும். மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் அதிரடி கைது
திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
2. சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது
சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.
3. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது; குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி வேதனை
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது என்று குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி கூறினார்.
4. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை
நெல்லையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.