தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
தெருக்களில் அச்சுறுத்தும் ஆட்டோக்கள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி செல்லும் பல ஆட்டோக்கள் திருமலைசாமிபுரம், போடிநாயக்கன்பட்டி, மென்டோன்சா காலனி வழியாக மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் தெருக்களில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியவில்லை. மேலும் மக்கள் சைக்கிளில் கூட செல்ல முடியாத அளவுக்கு ஆட்டோக்கள் அச்சுறுத்தும் வகையில் செல்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -லதா, திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி கிராமம் ஆர்.டி.யு. பகுதி வடபுறத்தில் உள்ள தெருக்களில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் பெண்கள் அச்சத்தோடு நடமாடும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -கணேசன், கல்லுப்பட்டி.
தெருவில் குப்பை குவியல்
திண்டுக்கல் பாண்டியன்நகர் 2-வது தெருவில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, தினமும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, திண்டுக்கல்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
பெரியகுளத்தில் கம்பம் சாலை, வடகரை பழைய பஸ்நிலையம், மதுரை சாலை ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், பெரியகுளம்.
Related Tags :
Next Story