பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை
கடலூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
கடலூர்,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, 13 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பூமி பூஜையையும் கலெக்டர் தொடங்கி வைத்தார். அதையடுத்து அந்த பகுதியில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளான கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
அப்போது, பயனாளிகளிடம் இந்த வாய்ப்பை நல்லமுறையாக பயன்படுத்தி நிரந்தர குடியிருப்புகளை அமைத்து கொள்ள வேண்டும் என்றார். இந்த திட்டம் பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தும் அத்தியாவசிய திட்டம் என்பதால் அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமுான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தாசில்தார் பலராமன், உதவி செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) முகமதுயாசின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக்பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story