மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை + "||" + Private hospital employee commits suicide

தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை

தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர், கம்பம் வனத்துறை அலுவலக சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜான்சிராணி கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்.இந்தநிலையில் ஆனந்த் நேற்று மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லவில்லை. 

இதனால் ஆனந்தை தேடி சக ஊழியர்கள், அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அப்போது ஆனந்த், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த ஆனந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.