மாவட்ட செய்திகள்

ரூ.33 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது + "||" + arrest

ரூ.33 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது

ரூ.33 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.33 லட்சம் மோசடி செய்த சங்க செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.33 லட்சம் மோசடி செய்த சங்க செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கூட்டுறவு சங்கம்
ராமநாதபுரத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் செயலாளராக வெளிப்பட்டினம் செல்லப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த காயாம்பு மகன் ராஜா என்பவர் செயலாளராக இருந்து வந்தார். இவர் செயலாளராக இருந்தபோது கடந்த 2016 ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சங்கத்தில் கடன் பெற்ற 12 பேர் தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தி உள்ளனர்.  இந்த கடன் தொகையை  சங்க செயலாளர் ராஜா நாள்வழி பதிவேட்டில் மட்டும் வரவு வைத்து ரொக்க பதிவேட்டில் வரவு வைக்காமல் இருந்துள்ளார். இவ்வாறு மேற்கண்ட 12 பேரின் கடன் தொகையான ரூ.33 லட்சத்து 8 ஆயிரத்து 362 தொகையினை சங்க கணக்கில் சேர்க்காமல் ராஜா மோசடி செய்துவிட்டாராம். 
கைது
இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வில் இந்த மோசடி தெரிய வந்ததை தொடர்ந்து ராஜா நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டாராம். இதுதொடர்பாக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. காவலாளி போல உடை அணிந்து இரவில் கடைகளின் பூட்டை உடைத்த ஆசாமி கைது
மேலூரில் காவலாளி போல உடை அணிந்து இரவில் கடைகளில் கைவரிசை காட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
2. காதல் திருமண ஜோடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
காதல் திருமண ஜோடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
3. ஆயுதங்களுடன் 4 பேர் கைது
ஆயுதங்களுடன் 4 பேர் கைது
4. மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைது
சிவகாசி அருேக சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.