விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது


விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 11:00 PM IST (Updated: 24 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

விழுப்புரம்

விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெரு பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 72). இவர் விழுப்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகளிடம் அவர்களது பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் அந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், கலியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் விழுப்புரம் அருகே வளவனூர் மேற்கு புதுச்சேரி சாலை கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சீனு என்கிற சிவனேசன்(22) வளவனூர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சீனு என்கிற சிவனேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story