புதுக்கோட்டை பணிமனையில் இருந்து பஸ்கள் வர தாமதம் பயணிகள் அவதி


புதுக்கோட்டை பணிமனையில் இருந்து பஸ்கள் வர தாமதம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 24 Nov 2021 5:36 PM GMT (Updated: 24 Nov 2021 5:36 PM GMT)

புதுக்கோட்டை பணிமனையில் இருந்து பஸ்கள் வர தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் பஸ்சுக்காக பயணிகள் பலர் காத்திருந்தனர். பணிமனையில் இருந்து டவுன் பஸ்கள் வர தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். பணிமனையில் டீசல் நிரப்புவதற்காக பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. மேலும் டீசல் பற்றாக்குறையாக இருப்பதால் தாமதமானதாகவும் கூறப்பட்டது. தற்போது டவுன் பஸ்களில் பெண்கள் பயணிக்க இலவசம் என்பதால் பெண்கள், மாணவிகள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து பஸ்களை பஸ் நிலையத்திற்கு விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். பஸ்கள் வர தாமதமானதற்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும், டிரைவர்கள் பணி வழக்கமாக மாற்றப்படும் நேரத்தினாலும், ஒவ்வொரு வண்டிக்காக டீசல் நிரப்பி அனுப்புவதினாலும் சிறிது தாமதமானதாகவும், வேறெதும் காரணமில்லை என கூறினர். மேலும் பஸ்கள் டீசல் போடுவதற்காக பணிமனைக்கு வரும் போது சிறிது தாமதமாகும் என்பது வழக்கமானது தான் என்றனர்.

Next Story