சமையலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி கிடந்தது தொடர்பாக சமையலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கருங்காலி குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி இருந்தது.
இதனையடுத்து மாணவர்களை வடமாதிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கவனக்குறைவால் சமையல் செய்த எட்டிவாடி கிராமத்தை சேர்ந்த அன்னம்மாள், கருங்காலி குப்பம் கிராமத்தை சேர்ந்த உதவியாளர் ராஜலட்சுமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story