மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு + "||" + Mountain snake in agricultural land

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு
விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த விவசாய நிலத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்துள்ளனர். உடனே பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் என்பவர் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டார்.