ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Nov 2021 11:35 PM IST (Updated: 24 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காரைக்குடி, 
காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகே 20-க்கும் மேற்பட்ட மக்கள் நல இயக்கங்கள் இணைந்த சமூக நலக் கூட்டியக்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி பகுதி யில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளா வதற்கு காரணமாக உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், அவர்களுக்கு பின்புலமாக செயல் படும் முக்கிய பிரமுகர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தில் மக்கள் மன்ற தலைவரும் சமூக நலக் கூட்டி யக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராசகுமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிம்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் சரீப், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி சண்முகப்பிரியா, ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு சோமன் உள்ளிட்ட ஏராளமானோர் உரையாற்றினர். பின் அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தாசில்தார் மாணிக்கவாசகத்திடம் அளித்தனர். அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சமூக நலக் கூட்டியக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் உள்பட 60 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story