மாவட்ட செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி + "||" + house collapsed

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
கரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கரூர், 
காவலாளி
கரூர் அருகே உள்ள புலியூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மலர்கொடி (35). இவர்களுக்கு ஆகாஷ் (16), சுனில் (11) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் புலியூர் கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். சுனில் 6-ம் வகுப்பும், ஆகாஷ் எஸ்.எஸ்.எல்.சி.யும் படித்து வந்துள்ளனர்.
வீட்டின் சுவர் இடிந்தது
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால் நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 சிறுவர்களும் சுவற்றுக்கு அடியில் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கட்டிட இடிபாடுகளை அகற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த சுனிலின் உடலை மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த ஆகாஷை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், பலியான சிறுவன் சுனிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் சுவர் இடிந்து பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.