மாவட்ட செய்திகள்

விவசாயியை வெட்ட முயன்றவர் கைது + "||" + The man who tried to cut the farmer was arrested

விவசாயியை வெட்ட முயன்றவர் கைது

விவசாயியை வெட்ட முயன்றவர் கைது
நெல்லை அருகே விவசாயியை வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்வேல் (வயது 24) விவசாயி. இவருக்கும், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பொன்னுமணி என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாழையூத்து அருகே ஆறுமுகவேல் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பொன்னுமணி, அவரது நண்பரான சுரேஷ் என்ற சூசை ஆகியோரும் வந்தனர். அப்போது, 2 பேரும் சேர்ந்து ஆறுமுகம்வேலை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் திரண்டதால், அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். பொன்னுமணியை தேடி வருகிறார்கள்.