கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு


கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 1:35 AM IST (Updated: 25 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச்சன்புதூர்:
கடையநல்லூர் நகராட்சியில் பணியாற்றிய ரவிச்சந்திரன் கடந்த ஆகஸ்டு மாதம் திடீர் என திருத்தங்கல் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றிய ரவிச்சந்திரனை மீண்டும், கடையநல்லூர் நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது. அதனை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி ஆணையராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story