ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசு மாடு
கடையம் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை பசு மாடு ஈன்றது.
கடையம்:
கடையம் அருகே உள்ள துப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி லலிதா. இந்த தம்பதியினர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து பசு மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாயாண்டியின் பசு ஒன்று அடுத்து அடுத்ததாக ஒரே பிரசவத்தில் 3 அழகான கன்று குட்டிகளை ஈன்றது. இதனால் ஆச்சரியமடைந்த அப்பகுதியினர் அந்த 3 கன்றுகுட்டிகளையும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து மாயாண்டியின் மனைவி லலிதா கூறுகையில், “எங்கள் மாட்டின் வயிறு சினைப்பருவத்தில் சற்று பெரிதாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான கன்றுகுட்டியை மாடு ஈன்றெடுக்கும் என நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து ஒரு காளை, 2 கிடேரி என 3 கன்றுகுட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்றனர்.இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டபோது, பொதுவாக பசு ஒரு கன்றை ஈனும். சில நேரங்களில் 2 கன்றுகளை ஈனும். ஆனால் 3 கன்றுகளை ஈன்றது மிகமிக அரிதான விஷயம் என்றனர்.
Related Tags :
Next Story