மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு
பாவூர்சத்திரம் அருகே மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மாயமான மூதாட்டி, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி மாயம்
பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிமுத்து மனைவி சிவனம்மாள் (வயது 86). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மணிமுத்து இறந்துவிட்டதால் சிவனம்மாள் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை காணவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் ஊர் அருகே உள்ள கிணற்றில் சிவனம்மாள் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அதிகாரி சுடலைவேல் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து சிவனம்மாள் உடலை மீட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story