மாவட்ட செய்திகள்

புகார்பெட்டி + "||" + Complaint box

புகார்பெட்டி

புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குைறகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகர், முனியாண்டிபுரம் காலனி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
அனுசாராஜ், பரமக்குடி. 
சாலையில் சுற்றும் கால்நடைகள் 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மெயின் ரோடு பகுதியானது போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகும். இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். 
பழனி கணேசன், திருப்புவனம்.
குப்பைகள் அள்ளப்படுமா? 
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பரவும் நிலை காணப்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை தினமும் அள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?        
   யோகானந்தன், மதுரை. 
பயணிகள் நிழற்குடை தேவை 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரிசல்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இ்ல்ைல. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும், முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?               
 சிவா, கரிசல்குளம். 
சாலையின் நடுவில் மின்கம்பங்கள் 
மதுரை மாவட்டம் பேரையூரில் மாசாண முத்தையா கோவில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் உள்ளன. இதன் காரணமாக இவ்வழியாக ஆட்டோக்கள் வர முடிவதில்லை. மேலும் விபத்து அபாயமும் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                           
   முருகன், பேரையூர். 
எரியாத தெருவிளக்குகள் 
மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரியவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். 
பாலு, மதுரை. 
கொசுத்தொல்லை 
மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டியன் நகர் 2-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையின் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுத்தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?      
  ராஜ்குமார், பெத்தானியாபுரம். 
குவிந்து கிடக்கும் குப்பை 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு பள்ளியின் அருகில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் நிலை காணப்படுகிறது. மாணவ, மாணவிகளின் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவார்களா?      கவி, திருச்சுழி.

தொடர்புடைய செய்திகள்

1. புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
3. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. புகார் பெட்டி
புகார் பெட்டி
5. புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-