சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராகிணி திவேதி
சமூக வலைத்தளங்களில் நடிகை ராகிணி திவேதி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு:
நடிகை ராகிணி திவேதி
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் திரைஉலகில் பிசியாகி விட்டார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் தனது வீடியோக்கள், புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ராகிணி திவேதி நடத்தி வரும் யூ-டியூப் சேனலில் அவ்வப்போது தனது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி புகைப்படங்கள்
இந்த நிலையில் அவர் சமீபத்தில் சேலை அணிந்து போட்டோ சூட் நடத்தி உள்ளார். அதில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம், யூ-டியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அந்த கவர்ச்சி படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் சுடச்சுட தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சில ரசிகர்கள் திருமணம் எப்போது என்றும், திருமண பெண்ணாக உங்களை பார்க்க ஆசை என்றும் பதிவிட்டு உள்ளார்கள். ரசிகர்களின் திருமணம் குறித்த கேள்விக்கும் நடிகை ராகிணி திவேதி சமூக வலைத்தளம் வழியாகவே தனது பதிலை தெரிவித்து இருக்கிறார்.
ரசிகர்கள்...
சில ரசிகர்கள், ‘‘சிறை வாழ்க்கையை மறந்து சகஜ நிலைக்கு திரும்பி இயல்பான வாழ்க்கையை வாழ தொடங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள். முன்புபோல் மீண்டும் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வர கடவுளை வேண்டுகிறோம்’’ என்று பதிவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story