செடிகள் அகற்றப்படுமா
செடிகள் அகற்றப்படுமா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த தாலுகா அலுவலகம் மூலம் பட்டுக்கோட்டை பகுதி பொதுமக்கள் பல்வேறு பயன்கள் பெற்று வருகின்றனர். இந்த அலுவலகம் மாடியில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தின் மாடியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்
குப்பன்னா பட்டுக்கோட்டை.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே நரசிங்கன் பேட்டை -துகிலி இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைைய சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாலு ஆடுதுறை.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அக்கரைவட்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் எதிரே ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீர்செய்ய வேண்டும் என்று அந்த பள்ளி மாணவ-மாணவிகளின் கோரிக்கையாகும்.
மாணவ-மாணவிகள் அக்கரைவட்டம்.
தஞ்சை நடராஜபுரம் 2 வது தெருவில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை சிமெண்டு சாலையாக உள்ளது. மேலும் இந்த தெருவில் வடிகால் வசதியில்லை. இதனால் மழைக்காலங்களில் தெருவில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர் சிறுமிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தெருவோரம் வளர்ந்து உள்ள செடிகளால் வீடுகளுக்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் நடராஜபுரம் தஞ்சாவூர்.
Related Tags :
Next Story