மாவட்ட செய்திகள்

5 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிப்பு- சேலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + The power connection went out

5 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிப்பு- சேலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை

5 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிப்பு- சேலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை
சேலத்தில் கழிவுநீரை வெளியேற்றிய 5 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்:
சேலத்தில் கழிவுநீரை வெளியேற்றிய 5 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சாயப்பட்டறையை விட்டு வெளியேற்றப்படுகிறதா? என்பது குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம் அம்மாபேட்டை தாதம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் நேற்று முன்தினம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, தாதம்பட்டி ஆகிய பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி பெறாமல் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
அப்போது அரசு விதிகளை மீறிய 5 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகளின் உரிமையாளர்களான காமராஜ், குமார், சவுந்தரராஜன், கல்பனா, முருகன் ஆகியோருக்கு அபராதம் விதிதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றக்கூடாது. எனவே, சாயப்பட்டறைகள் கழிவுநீரை வெளியேற்றினால் அவற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு பூட்டி சீல் வைக்கப்படும். மேலும், வீட்டு உபயோகம், குடோன் போன்றவைகளுக்கு மின் இணைப்பு பெற்று சாய தொழிற்சாலை நடத்தினால் அபராதம் விதிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.