மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால்மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகொல்லிமலையில் விபரீதம் + "||" + school student died

பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால்மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகொல்லிமலையில் விபரீதம்

பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால்மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகொல்லிமலையில் விபரீதம்
பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை கொல்லிமலையில் விபரீதம்
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள அசக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உத்திரகுமார் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி மீனாட்சி (32). இவர்களுடைய மகள் துர்காதேவி (17) இவர் அங்குள்ள தெம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
இந்த நிலையில் பாடங்கள் கடினமாக இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றும் பெற்றோரிடம் மாணவி கூறி வந்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் பள்ளியில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் துர்கா தேவி சரியாக படிப்பதில்லை என்று அவருடைய பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
விசாரணை
இதனால் பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு விடுபடாமல் சென்று வர வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்து வந்த மாணவி நேற்று முன்தினம் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். 
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி துர்கா தேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அசக்காட்டுப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.