தர்மபுரி ரெயில் நிலைய வளாகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி ரெயில் நிலைய வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி ரெயில் நிலைய வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி ரெயில் நிலைய வளாகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸாமேரி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயா, நகரக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மணிகண்டன், மார்க்ஸ், நிர்மலாராணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
தர்மபுரி ரெயில்நிலைய சாலையை தண்ணீர் தேங்காத அளவிற்கு தரமான சாலையாக மாற்றி அமைக்கவேண்டும். தர்மபுரி ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும்.
மின் விளக்குகள்
மேடுபள்ளமாக உள்ள பிளாட்பாரங்களை சீர் செய்யவேண்டும். கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கவேண்டும். தர்மபுரி ரெயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களை மீண்டும் திறந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ரெயில்நிலைய சாலையில் குப்பைகளை அகற்றி சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். ரெயில் நிலைய சாலையில் போதிய அளவில் மின் விளக்குகள் அமைக்கவேண்டும்.
ரெயில் நிலைய வளாகத்தில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தர்மபுரி ரெயில் நிலைய மேலாளரிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story