மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதில் மோதல்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு + "||" + Conflict in traveling while hanging on stairs: Sickle cut for college student on running bus

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதில் மோதல்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதில் மோதல்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஓடும் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தில் இருந்து சென்னை பாரிமுனை நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சென்னை பிரசிடென்சி கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி மற்றும் தண்டையார்பேட்டை அம்மா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். மாதவரம் ரவுண்டானா அருகே பஸ் சென்றபோது படிக்கட்டில் தொங்குவது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஓடும் பஸ்சில் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் தண்டையார்பேட்டை அம்மா கல்லூரியில் படித்து வரும் சாந்தகுமார் (வயது 19) என்ற மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கல்லூரி மாணவர்களின் இந்த மோதலால் பஸ்சில் இருந்த பயணிகள், பஸ்சில் இருந்து இறங்கி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார், படுகாயம் அடைந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்குன்றம் பாலவாயல் பகுதியைச் சேர்ந்த பிரசிடென்சி கல்லூரி மாணவரான தீனா (21) மற்றும் அம்பேத்கர் கல்லூரியில் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.