ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி; 2 பேர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 3:20 PM IST (Updated: 25 Nov 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரெபின் யோவான் (வயது 23). இவருடைய தந்தை எலிசா ஜான்சனும், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் நண்பர்கள். பெருமாள், ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது ரியல் எஸ்டேட் தரகராக உள்ளார்.

பெருமாள், ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரெபின் யோவானிடம் ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு, வேலை கிடைத்ததுபோல் நியமன ஆணையை கொடுத்தார். ஆனால் அது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெபின் யோவான், இந்த மோசடி குறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த லெனின் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story