கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
உடுமலை நகராட்சி பகுதியில் பழைய நகராட்சி அலுவலகம், மத்தியபஸ் நிலையம், ஏரிப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சர்தார் வீதியில் உள்ள பூங்கா நடுநிலைப்பள்ளி டி.வி.பட்டிணம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 5 இடங்களிலும், 5 நடமாடும் வாகனங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தது.
இந்த முகாம்களில் முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. உடுமலை நகராட்சி பகுதியில் நேற்று நடந்த முகாம்களில் மாலை 4 மணிவரை 268 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 742 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 1010 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோன்று ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன
Related Tags :
Next Story