மாவட்ட செய்திகள்

நத்தம் அருகே 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல் + "||" + Near Natham Public Stir in Route 4

நத்தம் அருகே 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல்

நத்தம் அருகே  4 வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல்
நத்தம் அருகே 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
நத்தம்:
நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை சேர்வீடு கிராமத்திற்குள் செல்லும் பாதையின் வழியாக அமைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேர்வீடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தினர் தாங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் சென்று வர 4வழிச்சாலையில் பெரியபாலம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இதற்கு மாறாக சிறிய பாலம் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென சேர்வீடு கிராமத்தில் உள்ள நத்தம் செல்லும் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு பொதுமக்களிடம் கூறினர். இதை பொதுமக்கள் ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.