மாவட்ட செய்திகள்

சிலை திருட்டு வழக்கில் 2 பேர் கைது + "||" + 2 persons arrested in idol theft case

சிலை திருட்டு வழக்கில் 2 பேர் கைது

சிலை திருட்டு வழக்கில் 2 பேர் கைது
மரத்தால் ஆன சிவன் சிலை திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆயிரம்விளக்கு வாலஸ் கார்டன் பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ்பிரபாகரன். இவர், தனது வீட்டில் இருந்த 2½ அடி உயரம் கொண்ட மரத்தால் ஆன சிவன் சிலை திருட்டுபோய் விட்டதாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சிலையை திருடியதாக திருவல்லிக்கேணியைச்சேர்ந்த முத்து (வயது 40), ஆலந்தூரைச்சேர்ந்த தமிமுன்அன்சாரி (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சிவன் சிலை மீட்கப்பட்டது.