சாலையோரத்தில் மீண்டும் மண்சரிவு


சாலையோரத்தில் மீண்டும் மண்சரிவு
x
தினத்தந்தி 25 Nov 2021 7:21 PM IST (Updated: 25 Nov 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையோரத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையோரத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருவதுடன், மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

மீண்டும் மண்சரிவு

இதற்கிடையே கே.என்.ஆர். பகுதியில் சாலையோரத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் மரங்கள் மற்றும் பாறைகள் கீழே விழுந்து இருக்கிறது. மீண்டும் தொடர் மழை பெய்தால் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது அந்த பகுதி சாலை அந்தரத்தில் தொங்குவது போல் காட்சி அளிக்கிறது. 

இந்த குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக அரசு பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே மண்சரிவு ஏற்பட்ட சாலையில் அசம்பாவிதம் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story