மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது + "||" + 2 arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் ஜின்னாநகரை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா (வயது 45). அவருடைய மகன் முகமது தாகா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6-ந்தேதி பேகம்பூரில் ஒரு ஓட்டல் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக், தமீம் அன்சாரி உள்பட 5 பேர் தந்தை, மகனிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் 5 பேரும் சேர்ந்து சாதிக்பாட்ஷா, முகமது தாகா ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக், தமீம் அன்சாரி ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை; திருச்சி சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கூலிப்படையை ஏவி வாலிபரை கொலை செய்த வழக்கில் திருச்சி சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
2. 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி இரட்டை கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. போலி போலீஸ் அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது
பட்டிவீரன்பட்டியில் சிக்கிய போலி போலீஸ் அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. தம்பதியிடம் நகை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் தம்பதியிடம் நகை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. காரில் கஞ்சா கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் வழியாக காரில் கஞ்சா கடத்திய 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.