மாவட்ட செய்திகள்

மாதிரி கோர்ட்டு வழக்கு விசாரணை போட்டி + "||" + Model Court Trial Competition

மாதிரி கோர்ட்டு வழக்கு விசாரணை போட்டி

மாதிரி கோர்ட்டு வழக்கு விசாரணை போட்டி
தேனி அரசு சட்டக்கல்லூரியில், மாதிரி கோர்ட்டு வழக்கு விசாரணை போட்டி நடந்தது.
தேனி:

தேனி அரசு சட்டக்கல்லூரியில், மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் மாதிரி கோர்ட்டு வழக்கு விசாரணை போட்டி நடந்தது. இதற்காக கல்லூரி வளாகத்தில் மாதிரி கோர்ட்டு அமைக்கப்பட்டது.

 கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, விசாரணை நடத்துவது போன்று மாணவர்களை வழக்கு தாக்கல் செய்து, விசாரணை நடத்தினர். இதில் சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை என தங்களின் வாதிடும் திறமையை வெளிக்காட்டினர். 

இந்த போட்டியில் மாதிரி நீதிபதிகளாக வக்கீல்கள் லலிதா, சுரேஷ்குமார் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டியில் மொத்தம் 40 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் சிறப்பாக செயல்பட்ட முதல் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. 

இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை, சட்டக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.