நூதனமுறையில் தங்கசங்கிலி பறிப்பு
நூதனமுறையில் தங்கசங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ஈசாபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பிச்சை என்பவரின் மனைவி தனலெட்சுமி (வயது75). இவர் நேற்று முன்தினம் வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்தபோது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திருப்புல்லாணி கோவில் கும்பாபி ஷேகத்திற்கு அபிஷேகம் செய்ய பால் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இங்கு கிடைக்காது என்று கூறிக்கொண்ட எழ முயன்றபோது அவரை மர்மநபர் பிடித் துள்ளார். அந்த சமயம் பார்த்து அவர் தனலெட்சுமி அணிந்து இருந்த 2¾் பவுன் தங்க சங்கிலியை பறித்து கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மாயமாகி விட்டார். இதனால் பதறி அடித்துக்கொண்டு தனலெட்சுமி கதறி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து தன லெட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story