பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன
திருவெண்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
திருவெண்காடு:
திருவெண்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
காற்றுடன் மழை
திருவெண்காடு சுற்றியுள்ள திருவாலி, திருநகரி, பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வீசிய பலத்த காற்றால் திருவாலியில் இரண்டு மரங்கள் வேருடன் சாலையில் சாய்ந்தது. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களை கொண்டு முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினார்.
மின்வினியோகம்
இதனைத் தொடர்ந்து ஊராட்சி பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் இணைந்து பழுதடைந்த மின் கம்பிகளுக்கு பதிலாக புதிய கம்பிகளை பொருத்தி, மின் வினியோகம் வழங்கினர்.. இதேபோல் பெருந்தோட்டம், வானகிரி ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர், டி.மணல்மேடு, அன்னப்பன்பேட்டை, கிடங்கல், மாமாகுடி, மடப்புரம், காலமநல்லூர், வளையல் சோழகன், சீவக சிந்தாமணி, சரபோஜிராஜபுரம், மாத்தூர், நட்சத்திரமாலை, காடுவெட்டி, கண்ணங்குடி, வெள்ளதிடல், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Related Tags :
Next Story