மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Daily Thanthi Complaint Box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:

தெருநாய்கள் தொல்லை
நிலக்கோட்டை இ.பி.காலனி பாலாஜிநகர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தனியாக செல்வோரை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் தெருக்களில் குழந்தைகள் விளையாடக்கூட முடியவில்லை. தெருநாய்களிடம் இருந்து மக்களை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலைமகள், நிலக்கோட்டை.
மழைநீர் வடிகால் வசதி
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள சின்னையாபுரத்தில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் மழை காலத்தில் வீடுகளுக்கு மழைநீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முறையாக வடிகால் வசதி செய்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துகுமார், சின்னையாபுரம்.
சேதமான பள்ளி கட்டிடம் 
சின்னாளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத சேதமான வகுப்பறை கட்டிடம் உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு மாணவர்கள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே பயன்படாத கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். -தமிழ்செல்வன், வக்கம்பட்டி.
தெருவிளக்கு வசதி தேவை
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி 1-வது வார்டு திருநகர்காலனிக்கு செல்லும் வழியில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாடுவதால் மக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தெருவிளக்கு வசதி செய்து தருவார்களா? -லோகநாதன், தேனி.
குளம் போல் தேங்கும் மழைநீர்
சின்னமனூர் சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் இறங்கி நடந்து தான் மக்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் காலில் புண்கள் வருகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி தொற்று நோயை பரப்பும் அபாயம் உள்ளது. இதை தடுக்க மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, சின்னமனூர்.
எரியாத பஸ்நிலைய விளக்குகள் 
தேனி புதிய பஸ் நிலையம், தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் சில பகுதிகளில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள் இருளில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வருகிறது. எனவே பஸ்நிலைய விளக்குகளை சரிசெய்ய வேண்டும். -பிரவீன்குமார், தேனி.


தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
2. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
3. தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
4. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-