ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை


ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை
x
தினத்தந்தி 25 Nov 2021 5:11 PM GMT (Updated: 25 Nov 2021 5:11 PM GMT)

ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ராமநாதபுரம்,
ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கனமழை 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலையும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் வழக்கம் போல தெளிவான அறிவிப்பு இல்லாததால் மாணவ- மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் அவதி அடைந்தனர். 
இந்தநிலையில் காலை 8 மணி அளவில்தான் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். 
இந்த விடுமுறை குழப்பத்தை களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை அளவு
 மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு மில்லிமீட்டரில்  வருமாறு:- ராமநாதபுரம்-17.6, மண்டபம்-11, பள்ளமோர்குளம்-5, ராமேசுவரம்-76.2 பாம்பன்-42.1, தங்கச்சிமடம்-30.5, திருவாடானை-8.4, தொண்டி-8.8, தீர்த்தாண்டதானம்-15, வட்டாணம்-8.4, ஆர்.எஸ்.மங்கலம்-5.5, பரமக்குடி-3.9, கமுதி-2.8, கடலாடி-3.2, வாலிநோக்கம்-3.8. சராசரி-15.14.

Related Tags :
Next Story