மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 25 Nov 2021 5:50 PM GMT (Updated: 25 Nov 2021 5:50 PM GMT)

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மீனவ கிராம நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். மேற்கு, வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதனால் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும். ஆகையால் அனைத்து மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் மீன்பிடி கலன்களை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதேபோல், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குனர் மோகனகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story