வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வாணியம்பாடி
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா., இவர் குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷா தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரது உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது பீரோக்களை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.42 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story