மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சாவு + "||" + Boy-girl drowned in river

திருப்பத்தூர் அருகே சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சாவு

திருப்பத்தூர் அருகே சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சாவு
திருப்பத்தூர் அருகே சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள். 

விளையாட சென்றவர்கள்

திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களின் மகன் நிஷாந்த் (வயது 2). சுரேஷ் தற்போது தனது மனைவி சத்யாவின் தாய் ஊரான திருப்பத்தூர் தாலுகா ஏ.கே.மோட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சத்யாவின் தங்கை கண்மணி, அவரது கணவர் முத்து வசித்து வருகிறர்கள்.

இந்த நிலையில் நேற்று முத்துவின் மகள் சஞ்சனா (3), சுரேஷின் மகன் நிஷாந்த் ஆகிய 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள பாம்பாறில் கலக்கும் நீரோடையில் விளையாட சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக புதிதாக வந்த மழை வெள்ளத்தில் இரண்டு பேரும் பாம்பாற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பரிதாப சாவு

சிறுவன்-சிறுமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் 2 பேரும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் சுமார் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சிறுவன்-சிறுமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.