மாவட்ட செய்திகள்

விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 2 பவுன் சங்கிலி பறிப்பு; ஒருவர் கைது + "||" + chain flush

விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 2 பவுன் சங்கிலி பறிப்பு; ஒருவர் கைது

விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 2 பவுன் சங்கிலி பறிப்பு; ஒருவர் கைது
குளித்தலை அருகே விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 2 பவுன் சங்கிலியை பறித்த நபரை 25 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
குளித்தலை, 
சங்கிலி பறிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அலங்காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புள்ளமநாயக்கர் (வயது 57), விவசாயி. இவர் நேற்று தனது வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக தேசியமங்கலம்- பேரூர் சாலையில் கருமாதம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் முகத்தில் முகக்கவசம் அணிந்தபடி வந்த 2 ஆசாமிகள் முகவரி கேட்டுள்ளனர்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் புள்ளமநாயக்கர் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
25 கிலோ மீட்டர் தூரம்...
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். அப்போது சங்கிலியை பறித்த ஆசாமிகள் தங்களை பின்தொடர்ந்து விரட்டி வருபவர்கள் மீது மிளகாய் பொடியை தூவிய படியே சென்றுள்ளனர். மேலும் குளித்தலை- மணப்பாறை சாலை வழியாக வந்து சிவாயம் பிரிவு சாலை வழியாக நுழைந்து குளித்தலை அருகே உள்ள பனிக்கம்பட்டி பகுதியை தாண்டி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சங்கிலியை திருடிய நபர்களை விடாமல் சிலர் துரத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் பனிக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
சமூக வலைதளங்களில் வைரல்
இதையடுத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த கிரிநாதன் (44) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருடியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
சங்கிலியை திருடி சென்றவர்களை பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கிராம நிர்வாக அதிகாரியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
கிராம நிர்வாக அதிகாரியிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
2. வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
3. கல்லூரிக்கு சென்ற பேராசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபர்
கல்லூரிக்கு சென்ற பேராசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபர் சிக்கினார்.
4. மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர்.
5. ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயற்சி
ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயன்றது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.