மேற்பனைக்காடு பகுதியில்20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை


மேற்பனைக்காடு பகுதியில்20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2021 12:13 AM IST (Updated: 26 Nov 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

மேற்பனைக்காட்டில் கடந்த சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்:
கால்நடைகள் சாவு
கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பால்மாடுகள், ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட நோய்கள் பரவி சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி கால்நடைகள் இறந்துள்ளது.
மாடுகள்
அதே போல கடந்த சில நாட்களில் மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் முருகேசன், குணசேகரன், பிரகாஷ், கலியபெருபாள், ராமமூர்த்தி, கிருஷ்ணன், கருப்பையா உள்பட பலரது வீடுகளில் வளர்த்த 20-க்கும் மேற்பட்ட பால்மாடுகள் கன்றுக்குட்டிகளும் இறந்துள்ளது. 
அதேபோல கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கீரமங்கலம், மேற்பனைக்காடு பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் இறப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வருகிறோம். இதனால் உடனடியாக கால்நடை மருத்துவ முகாம் நடத்துவதுடன், கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Next Story