மாவட்ட செய்திகள்

ஆற்றுவாரியில் முழங்கால் அளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள் + "||" + grandmothers body

ஆற்றுவாரியில் முழங்கால் அளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்

ஆற்றுவாரியில் முழங்கால் அளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்
தோகைமலை அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஆற்றுவாரியில் முழங்கால் அளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.
தோகைமலை, 
மூதாட்டி சாவு
தோகைமலை அருகிலுள்ள மேலவெளியூர் கிழக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் இறந்தவர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அங்குள்ள ஆற்றுவாரியை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார்.
பாலம் அமைக்க கோரிக்கை
இந்தநிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கல்லடை குளம் நிறைந்து உபரி நீர் சென்று வருகிறது. இதனால் ஆற்றுவாரியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதையடுத்து, மூதாட்டியின் உறவினர்கள் அவரது உடலை ஆற்றுவாரி வழியாக சுமந்து சென்றனர். 
எனவே சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தருவதுடன், ஆற்றுவாரி அருகே பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்
மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர்.