மாவட்ட செய்திகள்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. தர்ணா + "||" + Dharna

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. தர்ணா

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. தர்ணா
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், 
தர்ணா
கரூர் எம்.பி.ஜோதிமணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து கலெக்டர் பிரபு சங்கரும் தரையில் அமர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனாலும் ஜோதிமணி எம்.பி. போராட்டத்தை கைவிடாமல் இரவு வரை தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரப்படுத்துதலின் அமைச்சகத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தேன். 1 வருடத்திற்கு பிறகு முகாம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்து அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. 
ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாம்
இதில், திருச்சியில் கொரோனாவிற்கு முன்பு முகாம் நடத்தப்பட்டது. கொரோனாவால் மற்ற மாவட்டங்களில் நடத்த முடியாமல் போனது. கொரோனாவிற்கு பிறகு முகாம் நடத்தக்கூறி கரூர் கலெக்டர் உள்ளிட்ட மற்ற மாவட்ட கலெக்டர்களிடம் கூறினோம். இதில், கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்துமாறு கடந்த 6 மாதங்களாக கலெக்டரை வலியுறுத்தி வருகிறேன். ஆனால் முகாம் நடத்தப்படவில்லை. முகாம் நடத்தக்கூறி தொடர்ந்து 3 கடிதம் அனுப்பினோம். இதில் எந்தெந்த இடங்களில் முகாம் நடத்த வேண்டும் என்று கடிதம் வைத்தோம்.
இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடிதத்தில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து தங்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
உள்நோக்கம் என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சி செய்து மத்திய அரசு அனுமதி கொடுத்து செயல்படுத்த கூறினால், மாவட்ட கலெக்டர் மறுக்கிறார். மக்களுக்கு வரும் ஒரு திட்டத்தை ஒரு மாவட்ட கலெக்டர் தடுக்க வேண்டிய உள்நோக்கம் என்ன? இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் போது ஏன் கரூர் மாவட்டங்களில் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் விளக்கம்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறுகையில், எங்களுக்கு முகாம் நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. தற்போது கூட மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஆய்விற்காக தான் நாங்கள் செல்கிறோம். நாங்கள் ஒருங்கிணைந்த முகாம் நடத்தி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ முகாம் என்பது உபகரணங்கள் வழங்கும் முகாம். ஆனால் 10 சேவைகள் வழங்கக்கூடிய முகாம் 5 இடங்களில் நடக்கிறது. இன்று (அதாவது நேற்று) 4-வது முகாம், நாளை (இன்று) 5-வது முகாம் நடக்கிறது. எங்களுக்கு இந்த அரசியலுக்கு இடமே இல்லை. முகாம் நடக்கும் இடத்திற்கு எம்.பி.ஜோதிமணி வரவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். ஆனால் வரவில்லை என்பது அவர்களது விருப்பம். நாங்கள் தவறு செய்திருந்தால் மக்கள், மாற்றுத்திறனாளிகள் சொல்வார்கள், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்ணா
பெருந்தொழுவு அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் திடீர் தர்ணா
2. பெரம்பலூர் கலெக்டர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
4. கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
கல்யாணம்பூண்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. வேலை வாங்கி தருவதாக மோசடி மின்வாரிய அதிகாரி வீட்டு முன் வாலிபர் தர்ணா போராட்டம்
வேலை வாங்கி தருவதாக மோசடி மின்வாரிய அதிகாரி வீட்டு முன் வாலிபர் தர்ணா போராட்டம்.