மாவட்ட செய்திகள்

க.பரமத்தி கல்குவாரியில் விபத்து: 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி + "||" + driver killed

க.பரமத்தி கல்குவாரியில் விபத்து: 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

க.பரமத்தி கல்குவாரியில் விபத்து: 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
க.பரமத்தி அருகே உள்ள கல்குவாரியில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
க.பரமத்தி,
கல்குவாரி
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மேலமஞ்சமேடு, பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவுத்திரம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று கல்குவாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு லாரியை சுரேஷ் ஓட்டி சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று  50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 
டிரைவர் பலி
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், உடல் நசுங்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் பஸ் மோதி டிரைவர் பலி
பரமக்குடி அருகே தனியார் பஸ் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் நிற்காமல் சென்றதால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
2. சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
3. விபத்தில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலைய டிரைவர் பலி
பஸ், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலைய டிரைவர் பலியானார்.
4. மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.
5. தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மலைப்பகுதியில் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.