ஆட்டோ மோதி பெண் பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை-குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு


ஆட்டோ மோதி பெண் பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை-குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 12:28 AM IST (Updated: 26 Nov 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ மோதி பெண் பலியானார். இதையடுத்து, டிரைவருக்கு ஓராண்டு சிறையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

குளித்தலை, 
ஆட்டோ மோதி பெண் பலி
குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியை  சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சரோஜா (வயது 40). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்‌. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது.
ஓராண்டு சிறை தண்டனை
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான குளித்தலை காங்கிரஸ்ரோடு பகுதியை சேர்ந்த சபரிநாதனுக்கு (25) ரூ.4 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர் சபரிநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story