வெற்றிலையூரணி குளம் நிரம்பியது


வெற்றிலையூரணி குளம் நிரம்பியது
x
தினத்தந்தி 26 Nov 2021 1:24 AM IST (Updated: 26 Nov 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

6 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிலையூரணி குளம் நிரம்பியது.

தாயில்பட்டி, 
தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. மேலும் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள துணை மின் நிலைய தரைப்பாலம், குகன்பாறையிலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் உள்ள 2 தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Next Story