மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி 19 ஆடுகள் சாவு + "||" + 19 goats killed by lightning

மின்னல் தாக்கி 19 ஆடுகள் சாவு

மின்னல் தாக்கி 19 ஆடுகள் சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே மின்னல் தாக்கி 19 ஆடுகள் இறந்தது.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் (வயது 44). இவர் சொந்தமாக ஆடு வைத்து மேய்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல ஆடுகளை இந்திராநகர் வண்ணான்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. திடீரென மின்னல் தாக்கியதில் 19 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்னல் தாக்கி விவசாயி பலி
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
2. மின்னல் தாக்கி விவசாயி சாவு
திசையன்விளை அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார்.
3. பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் சாவு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தோர்ஹர். இந்த கிராமத்தில் முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது.‌