மாவட்ட செய்திகள்

டெய்லர் கடை முன் பட்டாசு குண்டு வீச்சு + "||" + Fireworks range in front of the shop

டெய்லர் கடை முன் பட்டாசு குண்டு வீச்சு

டெய்லர் கடை முன் பட்டாசு குண்டு வீச்சு
மார்த்தாண்டம் அருகே டெய்லர் கடை முன் பட்டாசு குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே டெய்லர் கடை முன் பட்டாசு குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
முன்விரோதம்
மார்த்தாண்டம் அருகே உள்ள கடமக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வன். இவரது மனைவி சுஜா (வயது 37). இவர் ஆலுவிளையில் தையல் கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் மேலே வீட்டுவிளையை சேர்ந்தவர் சசி (47). தொழிலாளியான இவர் சுஜாவின் தங்கையை திருமணம் செய்தார். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு சுஜாவும், அவரது கணவர் மரிய செல்வனும் தான் காரணம் என அவர்கள் மீது சசிக்கு முன்விரோதம்  இருந்து வந்தது. 
பட்டாசு குண்டு வீச்சு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுஜாவின் கடையின் அருகில் சசி வந்தார். பின்னர் அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாசு குண்டை கடை முன் வீசினார். அதன்பின்னர்  சுஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சுஜா, மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்து சசியை தேடி வருகிறார்.