கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பு


கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 8:16 PM GMT (Updated: 2021-11-26T01:46:19+05:30)

வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காரியாபட்டி, 
வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
தண்ணீர் திறப்பு 
விவசாயிகள் பயன்பெறும் விதமாக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருதுமால் நதிநீர் மூலம் பாசன வசதிபெறும் விவசாயிகளுக்காக விரகனூர் அணைக்கட்டு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அத்திகுளம் அணைக்கட்டிலிருந்து உலக்குடி, இருஞ்சிறை, மறையூர், மானூர், அத்திகுளம், உழுத்திமடை உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள் பாசனவசதி பெற்று பயன்பெறும் வகையில் அத்திகுளம் அணைகட்டிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிராம முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அத்திகுளம் அணைகட்டை திறந்தனர்.
கோரிக்கை 
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்த  அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கிருதுமால் நதிநீர் பாசன விவசாயிகள் சார்பாக நன்றி ெதரிவித்தனர். 
வருடந்தோறும் கிருதுமால் நதியில் நிரந்தரமாக தண்ணீர் திறந்து ஆயக்கட்டுதாரர்களாக அறிவிக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story