கூரைக்குண்டு பஞ்சாயத்தில் நுண் உரம் தயாரிக்கும் மையம்
கூரைக்குண்டு பஞ்சாயத்தில் நுண் உரம் தயாரிக்கும் மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவில் பணியாளர்கள் மூலமாக ஊரக பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மற்றும் குப்பைகளை கொண்டு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராஜபாளையத்தில் மேல ராஜகுல ராமன், தெற்குவெங்காநல்லூர், சிவகாசி யூனியனில் சித்துராஜபுரம், விஸ்வநத்தம் மற்றும் ஆனையூர், விருதுநகர் யூனியனில் கூரைக்குண்டு ஆகிய 6 இடங்களில் தலா ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிப்பு மையத்தினைகலெக்டர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார். விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்த நுண்உரம் தயாரிக்கும் மையம் சந்தை கழிவுகளை அப்புறப்படுத்தம் விதமாகவும், அந்த கழிவுகள் மூலம் உரம் தயாரித்து விற்பனை செய்யும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டார். இதில் திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story